logo

நாகர்கோவிலில் கழுதை பால் ஒரு சங்கு ரூ. 100-க்கு விற்பனை.

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் தெருத்தெருவாக கழுதையுடன் ஒருவர் வந்து பொதுமக்கள் கண் முன்பு கழுதையிடம் இருந்து பால் கறந்து குழந்தைகளுக்கு பாலூட்டும் சங்கின் அளவிற்கு சங்கு ஒன்று ரூ. 100-க்கு விற்பனை செய்தார்.

பால் விற்பனையில் ஈடுபட்டவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த நடேசன் கூறும்போது, கழுதை பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, பசியின்மை, மூச்சுத்திணறல் போன்ற நோய்களை குணப்படுத்தும் மருந்தாக விளங்குகிறது.

இந்த பாலை கொதிக்க வைத்து கொடுப்பது நல்ல பலனை தரும். கழுதையிடம் இருந்து ஒரு நாளைக்கு 10 சங்கு பால் மட்டும் கறந்து விற்பனை செய்யப்படுகிறது. என்றார். கடந்த ஒருமாதமாக குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை வரை நடேசன் கழுதை பால் விற்பனை செய்து உள்ளார். இவருடைய நண்பர்கள் 15 கழுதை மற்றும் குட்டிகளுடன் தமிழகத்தில் ஊர்-ஊராக சென்று கழுதை பால் விற்பனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0 views